Posts

Vaagai Women's club IWD 2025 Intro speech

  அனைவருக்கும் வணக்கம் ! அன்பும் அக்கறையும் நிறைந்த வாகை பெண்கள் மன்றத்தின் மகளிர் தின விழாவிற்காக,   இன்று இங்கே வருகை தந்துள்ள அனைத்து உறவுகளுக்கும், என் இதயப்பூர்வமான வரவேற்பையும் , வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் ! 2006 இல் தொடங்கப்பட்ட நம் crawley தமிழ் கல்விக் கூடத்தின் ஒரு முக்கிய பொறுப்பு சமூக வளர்ச்சிக்கு உதவுவதாகும் .   அந்த பொறுப்பின் முக்கிய வெளிப்பாடாகவே 5 ஆண்டுகளுக்கு முன் நம் வாகை மகளிர் மன்றம் தொடங்கப் பட்டது . பிறப்பில் இருந்து தொடங்குவோம்…   மங்கையா ராகப் பிறப்பதற்கே - நல்ல       மாதவஞ் செய்திட வேண்டும் , அம்மா ! என்று பெண்மையின் சிறப்பை கவிமணி மிக அழகாகப் பாடி இருக்கிறார் . அந்த மா தவத்தின் அருமையை உணர்ந்து , ஒவ்வொரு பெண்ணையும் பாராட்டும் நாளாக இந்த மகளிர் தினத்தை நாம் மாற்றுவோம் . கல்வி என்று வரும்போது பாரதியும் கூட ,   பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்று பாடி இருக்கிறார் . கடந்த 20-30 வருடங்களில் நாம்...